ஆசிய இறையியலில் ஆர்வம் காட்டும் வத்திக்கான்


எட்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்திய இறையியலாளர்கள் மற்றும் ஆயர்களை வத்திக்கானின் உயரிய அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

 

ஆசிய இறையியலில் வத்திக்கானின் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆர்வத்தை இந்த சந்திப்பு காட்டுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

 

இந்தியாவின் முன்னிலை இறையியலாளர்கள், 18 ஆயர்கள், பேராயர்கள் மற்றும் கர்தினால்கள் அனைவரும் வத்திக்கான் இறைநம்பிக்கை பேராயத்தின் முன்னிலை அதிகாரிகளை பெங்களூரு நகரில் சந்தித்துள்ளனர்.

 

ஜனவரி 21 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற இந்த சந்திப்பு, 2011ம் ஆண்டுக்கு பின்னர் வத்திக்கான் இறைநம்பிக்கை பேராயத்தின் அதிகாரிகள் நடத்துகின்ற இரண்டாவது கூட்டமாகும்.

 

இத்தகைய உரையாடல்கள் ஆசிய இறையியலில் எற்படும் மேம்பாடுகள், இறையியல் நிகழ்கின்ற சமூகச்சூழலில் உருவாகும் புதிய பாணிகள் மற்றும் மாற்றங்களை பற்றி அறிவதற்கு வத்திக்கான் காட்டுகின்ற ஆர்வத்தை காட்டுகின்றன என்று இறையியலாளர் இயேசு சபை அருட்தந்தை குருவில்லா பாண்டிகாட்டு தெரிவித்து்ளளார்.

Add new comment

1 + 12 =