ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்புக்கு புதிய தலைவர்


ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்புக்கு புதிய தலைவராக மியான்மார் நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ தேர்ந்தெடுக்க்பபட்டுள்ளார்.

 

இதுவரை தலைவராக பணியாற்றி வரும் மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸின் பதவி காலம் 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியோடு நிறைவுபெறும் நிலையில், புதிய தலைவராக கர்தினால் சார்லஸ் மாங் போ தெரிவு செய்யப்ட்டுள்ளார்.

 

அடுத்த ஆண்டு, அதாவது 2019ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடக்கம் கர்தினால் சார்லஸ் மாங் போ இந்த பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்பார். 

 

மியான்மர் நாட்டின் மோன்க்லா ஊரில் 1948ம் ஆண்டு கர்தினால் சார்லஸ் மாங் போ பிறந்தார்.

 

சலேசிய சபையில் சேர்ந்த அவர், 1976ம் ஆண்டு அருட்தந்தையாக திருப்பொழிவு பெற்றார்.

 

1990ம் ஆண்டு லாஷியோ மறைமாவட்டத்தின் முதல் ஆயராக சார்லஸ் மாங் போவை திருத்தந்தை புனித 2ம் ஜான்பாலால் நியமிக்கப்பட்டார்.

 

2003ம் ஆண்டு யாங்கூன் உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்க்பட்டார்.

 

2000 முதல் 2006ம் ஆண்டு வரை மியான்மர் தேசிய ஆயர் பேரவையின் தலைவராக சார்லஸ் மாங் போ பணியாற்றினார்.

 

2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவரை கர்தினாலான உயர்த்தினார்.

 

28 ஆசிய நாடுகள் அடங்கியுள்ள 19 ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பிற்கு தலைவராக கர்தினால் சார்லஸ் மாங் போ பணியாற்றவுள்ளார்.

Add new comment

1 + 8 =