ஆசியா பீபிக்கு எதிராக போராட்டம் நடத்திய தலைவர் கைது


மரண தண்டனை விதிக்கப்பட்ட கத்தோலிக்க பெண் ஆசியா பீபி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்ய்பட்ட பின்னர், போராட்டம் நடத்தி 3 நாட்களாக நாட்டின் இயல்பு நிலையை பாதிக்க செய்த மத குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

 

2010ம் ஆண்டு மரண தண்டனை பெற்ற பின் தனிமை சிறையில் கழித்த 5 குழந்தைகளின் தாயான ஆசியா பீபியின் மேல்முறையீட்டை தொடர்ந்து மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுதலையும் செய்தது.

 

இந்த தீர்ப்புக்கு பின்னர் தெய்வ நிந்தனைக்கு கொடூர சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆதரவு தெரிவிக்கும் தெக்ரீக் இ லாப்பால்க் என்கிற அரசியல் மற்றும் மத குழுவின் தலைவரும், தீவிர மத குருவுமான கடிம் ஹூசைன் ரி்ஸ்வி நடத்திய போராட்டம் 3 நாட்கள் வன்முறை மிகுந்த போராட்டங்களாக இருந்தன.

 

இந்த போராட்டங்களின் காரணமாக அரசு கையெழுத்திட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறுபான்மை மற்றும் மனித உரிமை குழுக்களின் கண்டனைத்தை பெற்றது.

 

விடுதலை செய்யப்பட்டு விமானத்தில் இஸ்லாமாபாத் சென்றுவிட்ட ஆசியா பீபியும், குடும்பத்தினரும் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

போராட்டம் நடத்திய குழுவுக்கு எதிரான தலைவர் ரிஸ்வியையும், நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்களையும் காவல்துறை நவம்பர் 23ம் தேதி கைது செய்துள்ளது.

 

இதனால் காவல்துறையினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளனர்.

Add new comment

7 + 10 =