ஆசியா பிபியின் விடுதலைக்கு எதிரான சீராய்வு மனு விசாரணை


தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்ற ஆசியா பிபி என்ற கத்தோலிக்கர் எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் வாடிய பின்னர் விடுதலை செய்ததற்கு எதிரான மறுசீராய்வு மனு விசாரிக்கப்படும் என்று ஜனவரி 25ம் தேதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ஆசியா பிபிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செ்யது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் விடுதலை செய்தது.

 

சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்புக்கு பின்னர், கடந்த நவம்பர் மாதம் இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

4 குழந்தைகளின் தாயான ஆசியா பிபி, 2010ம் ஆண்டு தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மரண தண்டனை வழங்கக்கூடிய குற்றமான இறைவாக்கினர் முகமது பற்றி இழிவாக பேசியதாக சக பணியாளாகளோடு ஏற்பட்ட சண்டைக்கு பின்னர் ஆசியா பிபி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ஆனால், முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட குவளையில் தண்ணீர் குடித்தால் அவர் தண்டிக்கப்பட்டதாக ஆசியா பிபியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மேல்முறையீட்டு வழக்கில் ஆசியா பிபியின் மரண தண்டனை ரத்து செய்து, உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது.

 

இதனால், வன்முறை போராட்டங்களை தொடங்கிய இஸ்லாமியவாத குழுக்கள் நாட்டின் செயல்பாட்டையே சில நாட்கள் முடக்கிவிட்டன.

Add new comment

6 + 10 =