ஆசியா பிபிக்கு எதிரான மறுசீராய்வு மனு தள்ளுபடி


தெய்வநிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெணான ஆசியா பிபியின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ததற்கு எதிரான சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

இதன் மூலம், ஆசியா பிபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து முன்னர் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவு ஒன்றில் கிறிஸ்தவரான ஆசியா பிபி முகமது நபியை இழிவாக பேசியதாக குற்றங்சாட்டப்பட வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

 

ஆனால், ஆசியா பிபி தன் மீதாக குற்றத்தை மறுத்தே வந்தார்.

 

எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் கழித்து தண்டனை அனுபவித்தார்.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுக்கப்பட்ட அசியா பிபியின் வழங்கின் முடிவில், அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதோடு, உடனடியாக விடுதலையும் செய்யப்பட்டார்.

 

இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் நாட்டின் செயல்பாடுகளை முடக்கும் அளவுக்கு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 

எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசியா பிபியும், குடும்பத்தினரும் அரசால் ரகசியமாக வைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியள்ளார். சில நாடுகள் அவர்களுக்கு தங்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

 

மறுசீராய்வில் எதிர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், விரைவில் அவர் வெளிநாட்டில் தஞ்சமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Add new comment

14 + 6 =