அஸ்ஸாம் தேவாலய தாக்குதல் – வெறுப்புணாவு தாக்குதல்


அஸ்ஸாமிலுள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் எ்ன்று இந்தியாவின் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இந்தியாவின் வட கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினையை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

டிபுருகார் மறைமாவட்டத்தின் சாபாடோலியிலுள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் பங்கு தேவாலயம் டிசம்பர் 15ம் தேதி சூறையாடப்பட்டிருந்தது.

 

தேவாயலத்தின் சிலுவை, சிலுவை பாதைகள், செப புத்தகங்கள் அனைத்தும் அழிக்க்பபட்டிருந்தன. குரோட்டோவிலிருந்து அகற்றப்பட்டிருந்த மரியன்னை சிலை கீழே தரையில்  வீசப்பட்டிருந்தது.   

இந்த பகுதியில் நிலவி வருகின்ற இணக்கமான சூழ்நிலையை குலைப்பதற்காக யாரோ இதனை செய்துள்ளதாக பங்குதந்தை சிப்ரியன் லாகாரா கூறினார்.

 

88 ஆண்டுகால இந்த தேவாலய வரலாற்றில் இதுபோல எந்த நிகழ்வும் நடைபெற்றதில்லை என்று அவர் மேலும் கூறினார்

 

இது தொடர்பாக 2 குடிகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பலியாடுகளே தவிர இந்த தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய வேண்டுமென திருச்சபை தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Add new comment

5 + 15 =