அவதூறாக பேசிய சட்டமன்ற உறுப்பினருக்கு நோட்டீஸ்


உத்தர பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை அவதூறாப் பேசிய பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் சாதனாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

லக்னோவில் நடந்த கூட்டத்தில் முகல்சாரே தொகுதியின் சட்டமன்ற பெண் உறுப்பினர் சாதனா சிங் நேற்று பேசினார்.

 

மாயாவதியை கடும் சொற்களாலும், அவமரியாதையாகவும் விமர்சித்தார்.

 

மாயாவதிக்கு சுயமரியாதை கிடையாது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர். மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார்.

 

ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை. என்று சாதனா சிங் பேசினார்.

 

ஒரு கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண் இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பதை ஏற்க முடியாது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

Add new comment

2 + 5 =