அலபாமா சூறாவளி – 23 பேர் பலி, தொடரும் மீட்பு பணிகள்


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றில் 23 பேர் பலியாகியுள்ளனர்.

 

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள கிழக்குப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றில் பலியானோரில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

 

இதற்கு முன்னர் இம்மாதிரியான நிலையை எதிர் கொண்டதில்லை என்று அலபாமா பகுதி மக்கள் கூறியுளளனர்.

 

வெளிச்சமில்லாத காரணத்தால் மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அப்பகுதிகள் சாலை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூறாவளியில் பலியானவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Add new comment

7 + 0 =