அருட்தந்தையர் பாலியல் மீறலை விசாரிக்க தனிக்குழு கோரிக்கை நிராகரிப்பு


கத்தோலிக்க அருட்தந்தையரால் குழந்தைகள் மற்றும் அருட்சகோதரிகள் மீதான பாலியல் மீறலை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை இந்தியாவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

இது தொடர்பாக சஞ்ஜீவ் குமார் தொடுத்த பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

அருட்தந்தையரின் பாலியல் மீறல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழுக்களை அமைத்து, விசாரணையை விரைவுப்படுத்த மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

 

டெல்லி உயர் நீதிமன்றம் இந்த கோரி்க்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது

 

கேரளா அருட்சகோதரி ஒருவரை ஆயர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது பற்றி குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகின்ற சமீபத்திய குற்றச்சாட்டை தவிர வேறு சம்பவங்கள் எதையும் இந்த வழக்கு உள்ளடக்கவில்லை என்று தள்ளுபடி செய்ததற்கான காரணத்தையும் இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவற்றை எல்லா நாங்கள் விசாரிப்பதாக இல்லை. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறிவிட்டது.

 

தனிப்பட்டதொரு தொலைபேசி ஹாட்லைன் சேவையை டெ்ல்லி அரசு தொடங்க வேண்டும் என்றும், அதன் மூலம் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவோர் உதவியை கோர முடியும் என்றும் இந்த வழக்கில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

Add new comment

1 + 0 =