அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு


தமிழ் நாட்டிலுள்ள அரசு பள்ளி ஆசியர்களுக்கு பயோமெட்ரிக் முறைப்படி வருகைப்பதி்வு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

 

2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி முறை அமல்படுத்தப்படுமென தெரிவித்திருந்தார்.  

 

தொடர்புடைய துறை நிபுணாகளுடன் அரசு மேற்கொண்ட ஆலோசனையில் பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்த அறிவுரை வழங்கப்பட்டது.

 

இந்த கருவிகள் தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன.

 

இதற்கு ரூ.15.30 கோடி செலவிடப்பட்டு பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படவுள்ளது.

 

7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Add new comment

7 + 10 =