அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

 

21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

 

2 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

அரசு நியமித்த வல்லுநர் குழு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து சமீபத்தில் அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது

 

அரசிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வராத நிலையில், போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

8 + 0 =