அரசு அதிகாரிகளை வீட்டுக்கே வாழ அனுப்பி கண்காணிக்கும் சீனா


அரசு அதிகாரிகளை சிறுபான்மை இன மக்களின் வீடுகளுக்கு அனுப்பி கண்காணிக்கினற சீன அரசின் நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

சீனாவின் மேற்கில் அமைந்துள்ள சின்ஜியாங் பகுதியில் அதிக முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்த சிறுபான்மை முஸ்லிம்களின் வீடுகளில் சென்று வாழ்வதற்கு அரசு அதிகாரிகளை அனுப்புகின்ற கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது.

 

கடந்த பல ஆண்டுகளில் சின்ஜியாங்கில் அதிகமாக வாழுகின்ற உய்கூர் முஸ்லிம்களின் வீடுகளிலும், பிற சிறுபான்மை இனங்களின் வீடுகளிலும் சென்று ஒன்றாக வாழ்வதற்கு பல லட்சக்கணக்கான ஹான் இனத்தை சேர்ந்த சீன அதிகாரிகளை அந்நாடு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.

 

சீனாவில் ஏறக்குறைய 95 விழுக்காட்டினர் ஹான் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

 

இந்த சிறுபான்மை இனத்தவரின் மத நம்பிக்கையை மதிப்பிட்டு கண்காணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

தெரிய வருகிறது.

 

மக்களின் மீதான இத்தகைய அந்தரங்க அத்துமீறலை மனித உரிமை குழுக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

 

ஆனால், சீன தேசிய ஒற்றுமையை மேம்பட செய்யவே இவ்வாறு செய்வதாக சீனா நியாயம் கற்பித்து வருகிறது.

Add new comment

5 + 8 =