Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அரசியல் குழப்பத்திற்கு தீர்வுகாண இலங்கை மத தலைவர்கள் கோரிக்கை
இலங்கையின் ஜனநாயகத்ததை கேள்வி குறியாக்கும் அரசியல் குழப்பத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென இலங்கை மத தலைவர்கள் கோரியுள்ளனர்.
இட்டபானே தாம்மாலங்கர தேர, கேடுகோடா மாமாவாச தேர, ஆயர் வின்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் கர்தினால் மால்கோல்ம் ரஞ்சித் ஆகியோர் இணைந்து இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் அதிகாரபூர்வ தலைமை அமைச்சர் என்று இருவர் கோருகின்ற அரசியல் சாசன நெருக்கடிக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மக்களின் நலன்களுக்காக நல்லதொரு ஆட்சியை வழங்கும் உறுதிப்பாட்டை வழங்கி, நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள அவர்களது கடமையை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த மத தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த உன்னதமான கடமையை கைவிட்டு விடாமல், மக்கள் சந்திக்கின்ற நெருக்கடிகளுக்கு நா்டாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டப்படியான ஆட்சியை உறுதி செய்வதற்கு பொருளுள்ள நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்து, நாம் விரும்புகின்ற ஜனநாயக கொள்கைகளை வளர்த்து, பாதுகாத்து, நாட்டில் அமைதியும், இணக்கமும் நிலவ செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனது கூட்டணி கட்சியில் பிரதமராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்கவை அகற்றிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபச்சவை பிரதமாராக பதவி பிரமாணம் செய்து வைத்ததால், கடந்த அக்டோபர் 26ம் தேதி இலங்கையில் அரசியல் குழப்பம் தொடங்கியது.
மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட அதிகாரபூர்வ பிரதமர் தானே என்ற ரணில் பிடிவாதம் பிடிக்க, மகிந்த ராஜபக்ச பிரதமருக்கான பணிகளை செய்ய தொடங்க இந்த பிரச்சனை வி்ஷ்பரூபம் எடுத்தது.
நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டாலொழிய மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் கூறிவிட, நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேன கலைத்தார்.
ஆனால், அவ்வாறு நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீப்பளிக்கவே, அடுத்த கூடிய இரண்டு நாடாளுமன்ற கூட்டங்களில் ராஜபக்சவுக்கு ஆதராவாக கொண்டு வரபபட்ட இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ராஜபக்சவுக்கு பாதகமான முடிவை வழங்கின.
இவ்வாறு, இழுபறி தொடர்ந்து நடைபெற்று வருகையில், இந்த மத தலைவர்களின் அறிக்கை வெளிவந்துள்ளது.
Add new comment