அயோத்தியில் இந்துக்கள் திரண்டனர் – முஸ்லீம்கள் அச்சம்


இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இந்து தறவிகள் கூடியுள்ளதால், அங்கு பதற்றம் எற்பட்டுள்ளது.

 

விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ள தர்ம சபா கூட்டம் அயோத்தியில் நடைபெறுகிறது.

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், வரும் டிசம்பர் 6ம் தேதி 26ம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் அதிக இந்துக்கள் கூடியது இப்போதுதான்.

 

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதலே அதிக இந்துக்கள் அங்கு குழும தொடங்கிவிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

தேர்தல் வரும் காலங்களில் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி பாரதிய ஜனதா கட்சி பதற்றத்தை தூண்டிவிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

 

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்களின் வாக்ககளை பெறுவதற்கு, பாஜக நேரடியாக இல்லாமல், அது செல்வாக்கு செலுத்தும் கட்சிகளை தூண்டிவிட்டு குளிர்காய்வதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சவசேனை அமைப்பு தெரிவித்திருக்கிறது.

 

ராமர் போருக்கு செல்வதுபோல, அயோத்தியை சுற்றியுள்ள இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

 

இந்துக்கள் பெருந்திரளாக அங்கு கூடியுள்ளதால், அங்கு வாழும் இஸ்லாமியர் அச்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

 

இதுவரை இது பற்றி எவ்வித பேச்சும் எழாமல் இருந்த நிலையில், இப்போது மட்டும் இந்த சர்ச்சை மேலெழுவது ஏன்?.என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதோடு, தேர்லுக்காக பாரதிய ஜனதா கட்சி இந்த பிரச்சனையை பயன்படுத்தைதான் தற்போதைய நிலை காட்டுகிறது என்று கூறியுள்ளது.

Add new comment

2 + 14 =