அயோத்தியா என்று பெயர் மாற்றம் பெறும் பைஸாபாத்


உத்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பைஸாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டம் என பெயர் மாற்றப்படும் என்று  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

 

கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் நினைவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

தென்கொரியா அதிபரின் மூன் ஜியே-இன்னின் மனைவியான கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் இதனை திறந்து வைத்தபோது, இந்த பெயர் மாற்றம் அறிவிக்க்பபட்டு்ளளது.

 

 

இந்த நினைவக திறப்பு விழாவின்போது உரையாற்றியபோது, யோகி ஆதித்யாநாத் இதனை தெரிவித்துள்ளார்.

 

அங்கு ராமர் பெயரில் விமான நிலையமும், தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

உத்திர பிரதேசத்தில் இஸ்லாமிய பெயரில் வழங்கப்பட்டு வருகின்ற ஊர், மற்றும் இடங்களை பெயர்களை யோகி ஆதித்யநாத் மாற்றி வருகிறார்.

Add new comment

2 + 14 =