அமைதி பேச்சுவார்த்தையை புதுப்பிக்க கோரிக்கை - பிலிப்பீன்ஸ் திருச்சபை குழுக்கள்


கம்யூனிஸ்டுகளோடு நடத்திய அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பிலிப்பீன்ஸின் திருச்சபைகளின் பல்சமய  குழுவொன்று மீண்டும் தெரிவித்திருக்கிறது.

 

சமீபத்திய வாரங்களில் கிளர்ச்சியாளர்களின் அமைதி ஆலோசகர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த கோரிக்கை வந்துள்ளது.

 

நியாயமான, துணிச்சலான அமைதியை கொண்டு வர இருக்கின்ற சிறந்த தெரிவு பேச்சுவார்த்தையே என்று பல்வேறு மதப் பிரிவுகள் மற்றும் பலதரப்பட்ட கிறிஸ்தவ பாரம்பரியங்களை சேர்ந்த திருச்சபைகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

 

அரசு படைப்பிரிவுகளின் மீது தாக்குதல்களை தொடர்வதாக கிளர்ச்சியாளர்களை அரசு குற்றஞ்சாட்டிய பின்னர், 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த அமைதி பேச்சுவார்த்தைகள் தடை பட்டன.

 

இந்த அமைதி பேச்சுவார்த்தைகளை 74 சதவீத பிலீப்பீன்ஸ் மக்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளதை போல்ஸ்டர் பல்ஸ் ஆசியாவால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டி இந்த திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.

 

இவ்வாறு கருத்து தெரிவித்தவர்களில் 80 சதவீதத்தினர் போரை அமைதி பேச்சுவார்த்தையால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளனர்.

Add new comment

11 + 0 =