அமெரிக்க ஹெச் 1பி விசாவில் புதிய மாற்றம்


அமெரிக்கா வழங்குகின்ற ஹெச் 1பி விசாவில் புதிய மாற்றத்தை கொண்டு வரப்போவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் உயர் கல்வி கற்றுவிட்டு வேலைக்காக அமெரிக்காவில்  தங்கி இருப்பவர்களுக்கு, அதிலும் குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

 

குடியுரிமை பொறுவதற்கான உதவுவதாக இந்த புதிய வழிமுறை அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் வேலை செய்ய வந்திருக்கும் திறமைசாலிகளை ஊக்குவிக்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

 

அமெரிக்காவில் குடியேறாமல், வெறுமனே தங்கி மட்டும் வேலை செய்வோருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதனை பெறுவோர் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம்.

 

அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களும் தங்களுக்கு தேவைப்படும் வேலையாட்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து தேர்ந்தெடுத்து பணியமர்த்திக்கொள்ள இந்த விசாவை அதிகமாக பயன்படுத்தி வந்தன.

 

டிரம்ப் அதிபரான பிறகு, ஹெச் 1பி விசா பெறுவதில் அமலான கடும் கட்டுபாடுகளுக்கு எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை வரவுள்ளது.

Add new comment

13 + 2 =