அமெரிக்க வான்வழி தாக்குதலில் 62 தீவிரவாதிகள் கொலை


ஆப்பிரிக்காவின் கிழக்கில் அமைந்துள்ள சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

சோமாலியாவின் தென் பகுதியிலள்ள பனாதிர் மாகாணத்தில்  சனி மற்றும் ஞாயிறு அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

 

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.  

 

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

 

சோமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இதுவாகும்.

Add new comment

4 + 6 =