அமெரிக்க-மெக்ஸிகோ தடுப்புச்சவருக்கு நாடாளுமன்றத்தை மீறி நிதி ஆதரவு


மெக்சிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு தடுப்புச்சுவர் எழுப்புவதற்கு ரூ. 6, 900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின்போது குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.

 

இதற்காக சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் கோரிக்கை வைத்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அவசரநிலையை அறிவித்தார்

 

எதிர்க்கட்சி (ஜனநாயக கட்சி) உறுப்பினர்கள் அதிகவுள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அவசரநிலையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியதை வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி டிரம்ப் ரத்து செய்தார்.

 

அவசர நிலையில், மாற்றியமைக்கப்பட்ட பட்ஜெட்யை பாதுகாப்புத் துறை தலைமையகம் அனுப்பி வைத்துள்ளது. அதில், மெக்சிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு தடுப்புச்சுவர் எழுப்ப ரூ. 6, 900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு ஜனநாயகக் கட்சி நாlடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Add new comment

1 + 1 =