அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு


அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் பெரும்பான்மையை அந்நாட்டின் ஜனநாயக கட்சி இப்போது பெற்றுள்ளது.

 

செனட் அவையில் தங்களது பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது குடியரசு கட்சி.

 

அதிபர் டிரம்ப் கொண்டு வருகின்ற சட்ட திட்டங்களை தடுத்துவிடுகின்ற பலதை தற்போது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெற்றுள்ளனர்.

 

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் செனட் அவை, ஆளும் கட்சியிடமும், பிரதிநிதிகள் அவை, எதிர்க்கட்சியிடம் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இனிமேல் அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகள், இதுவரையில்லாத வகையிலான கடும் எதிர்ப்பை பிரதிநிதிகள் அவையில் எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add new comment

5 + 14 =