அமெரிக்கா, வட கொரிய இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒப்பந்தங்களும் எட்டப்படாததால் தோல்வியில் முடிந்துள்ளது.

 

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க தடைகள் முழுவதையும் நீக்க வேண்டுமென தெரிவித்தார்.

 

ஆனால், அணு ஆயுத ஒழிப்பில் முக்கிய அம்சங்களில் எவ்வித உடன்பாடும் எட்ட முடிவில்லை என்பதால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிபர் டிரம்ப் வெளியேற வேண்டியதாயிற்று என்று வெள்ளை மாளிகை தெரிவித்து்ளளது.

 

இந்நிலையில், கொரிய தீபகற்ப அணு ஆயுத ஒழிப்பு ஓரு இரவில் சாதித்துவிட கூடிய காரியமல்ல. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும், அமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சுவார்த்தைகளை தொடரும் என்று நம்புவதாக சீனா தெரிவித்து்ளளது.

 

அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது குறித்து கருத்து தெரிவித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சமரம் செய்யாத டிரம்பிக் நிலை்பாட்டை முற்றிலும் ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

 

 

 

புதன்கிழமை நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், இருநாடுகளுக்கும் இடையே அமைதியை பேணிக்காப்பது, கொரிய தீபகற்பத்தில் அமைதி காப்பது, அணு ஆயுதம் இல்லாத நாடாக வடகொரியாவை உருவாக்குவது என்ற முடிவுகளுக்கு அவர்கள் வந்திருந்தனர்.

 

அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக மாறுவதற்கு வடகொரியா இன்னும் தயக்கம் காட்டுவதாகவே இது பார்க்கப்படுகிறது.  

 

வட கொரியா முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழித்தால், இனிமேல் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளித்ததால் மட்டுமே, அந்த நாட்டின் மீதான பொருளாதாரத்தடை நீக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 3 =