அமெரிக்கா-தென் கொரியா இடையே போர் பயிற்சி


அமெரிக்கா – தென் கொரியா நாட்டு பாதுகாப்பு படைகள் இணைந்து திங்கட்கிழமை தொடங்கி ஒரு வாரம் போர் பயிற்சி நடத்தவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

கூட்டணி என்ற பெயரில் இந்த ராணுவ பயிற்சி தென்கொரியாவில் நடத்தப்படுகிறது.

 

வடகொரியா தலைவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது தொடங்கி இந்த கூட்டு பயிற்சி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாவது முறையாக வியட்நாமில் நடைபெற்ற சந்திப்பிலும் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக எந்த முன்னேற்றமும் எடுக்கப்படவில்லை.

 

இந்த பின்னணியில் இந்த ராணுவ பயிற்சி வருகிறது.

 

போர் கப்பல்கள், போர் விமானங்கள், பீரங்கிகள், போன்றவை இந்தப் போர் பயிற்சியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

Add new comment

1 + 0 =