அமெரிக்கா திரும்ப பெறக் கூடாது – குர்து இன கிளர்ச்சியாளர்கள்


ஈராக்கிலும், சிரியாவிலும் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறக் கூடாதென குர்து இன கிளர்ச்சியாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

இஸ்லாமிய அரசு என்கிற பயங்கரவாத குழுவால் இந்த பிரதேசத்தில் இன்னும் அச்சுறுத்தல் நிலவகிறது. ஈராக்கின் வடக்குப் பகுதிகளில் இது இன்னும் செயல்பட்டு வருகிறது என்று குர்து இன ஆயுதப்படையின் தலைவர் பர்சானி கூறியுள்ளார்.

 

சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவ படையினருக்கும், இ்லாமிய அரசு என்கிற பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது.

 

உள்நாட்டுச் சண்டையில், குர்து இனப் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் 2,000 படை வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

 

ஆனால்,  சிரியாவில் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாா குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். எனவே, சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்று கடந்த மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

Add new comment

13 + 4 =