அமெரிக்காவுக்கு வட கொரியா திடீர் மிரட்டல்


அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணு ஆயுத ஒழிப்பு நிறுத்தபடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது. .

 

வட கொரியாவுடன் நட்புறவை பேணுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் பாராட்டிக் கூடியவை.

 

இருப்பினும், வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

 

இத்தகைய நடவடிக்கையால் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை வட கொரியா கைவிடும் என்று அமெரிக்கா நினைப்பது தவறு.

 

இத்தகைய நடவடிக்கைகள் எங்களுடைய ஆணு ஆயுதங்களை அழித்து வருகின்ற பாதைக்கு நிரந்தர  தடையை ஏற்படுத்தி விடும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

மனித உரிமை மீறல் தொடர்பாக வட கொரியாவின் மூன்று அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது.

 

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நடைபெறும் வார்த்தை போருக்கு பிறகு, டிரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

 

அப்போது அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Add new comment

3 + 0 =