அமெரிக்காவுக்கு எதிராக உலக இஸ்லாமியரை இணைக்க ஈரான் முயற்சி


உலகிலுள்ள இஸ்லாமியர் அனைவரும் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அழைப்புவிடுத்துள்ளார்.

 

இஸ்லாமிய மதத்திற்கும், அதன் எதிர்கால தலைமுறையினருக்கும் எதிராக அமெரிக்கா உள்ளது.

 

எனவே, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை நிச்சயமாக  எடுக்க வேண்டும் என்று இஸ்லாமியருக்கு அரசு தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்ற அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசியுள்ளார்.

 

பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு மற்றும் வல்லரசுகளுக்கு எதிராகவும், சௌதி மக்களுடைய நலன்களை பாதுகாக்கவும் ஈரான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, அதன் மீது தடைகளை விதித்து வருகிறது.

 

அதன் நட்பு நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதையும் தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

இந்த பின்னணியில், உலக இஸ்லாமியர் ஒன்றுசேர வேண்டும் என்று ஈரான் அழைப்புவிடுத்துள்ளது.  

Add new comment

9 + 1 =