Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் புகும் இந்தியர்கள்
Tuesday, December 04, 2018
2014-ம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாக தெரியவருகிறது.
கடந்த ஜூலை மாதம் வரை 7 ஆயிரத்து 214 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் 296 பேர் பெண்கள்..
கடந்த 2014-ம் ஆண்டு 2,306 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
2016ம் ஆண்டு 96 பெண்கள் உள்ளிட 2,971 இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளில் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
Click to share
Add new comment