அமெரிக்காவின் பொருளாதார தீவிரவாதம்


அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தீவிரவாதத்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.

 

அமெரிக்கா ஈரான் மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் போதைப் பொருட்களுக்கும், தீவிரவாதத்துக்கு எதிரான தங்களின் திறன் பாதிப்படைகிறது என்று அவர் குறிப்பிடடுள்ளார்.  

 

இந்தத் தடைகள் ஈரானை பலவீனப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும்தான் ஆபத்து என்கிறார் அவர்.

 

அமெரிக்கா பொருளாதார தீவிரவாதத்தை நடத்திக் வருவதாக தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தியபோது அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார். .

 

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்துமானால், வளைகுடா நாடுகள் எதுவுமே கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய விடமாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஈரானுடன் செய்திருந்த அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதிக்க தொடங்கியது.

 

பின்னர், ஈரானிடம் இருந்து அதனுடைய கூட்டணி நாடுகள் எதுவுமே கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று வலியுறுத்தி சில நாடுகளை மிரட்டி பணியவும் வைத்துள்ளது அமெரிக்கா.

Add new comment

1 + 3 =