அன்னை தெரசா சபையை சேர்ந்த அருட்சகோதரிக்காக அருணாச்சல பெண்கள் செபம்


எட்டு மாதங்களுக்கு முன்னால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிஷினரிஸ் ஆப் சேரிட்டி துறவற சபையின் அருட்சகோதரிக்காக ஜார்கண்ட் பெண்கள் செபம் செய்து வேண்டியுள்ளனர்.

 

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனையில், அன்னை தெரசா துறவற சபையை சோந்த அருட்சகோதரி கொன்சீலியா பாஸ்லா விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டுமென செபம் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஜார்கண்டிலுள்ள நிர்மல் ஹரிடே அருட்சகோதரிகள் இல்லத்தில் இருந்து குழந்தையை கடத்திய குற்றச்சாட்டில், எட்டு மாதங்களு்ககு முன்னால் இவர் கைது செய்யப்பட்டார்.

 

குழந்தை கடத்தல் குற்றச்சாட்டில் ஜார்கண்டின் தலைநகர் ராஞ்சியில் 2018ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி அருட்சகோதரி கொன்சீலா, அந்த இல்லத்தின் பணியாளர் அனிமா இன்வாரோடு கைது செய்யப்பட்டார்.

 

இன்வாருக்கு பிணை வழங்கப்பட்டு அவர் வெளிவந்துள்ள நிலையில், அருட்சகோதரி பாஸ்லா இன்னும் சிறையில் அடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

6 + 11 =