அன்னை தெரசாவுக்கு வழங்கிய விருதில் பாகுபாடு - யோகா குரு


கிறிஸ்தவர் என்பதால் அன்னை தெரசாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரெத்னா வழங்கப்பட்டது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்த விமர்சனத்தை கிறிஸ்தவ தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

 

இந்தியாவில் ஏழை மக்களுக்கு அன்னை தெரசா செய்து வந்த மனிதநேய பணிகளை பாராட்டும் வகையில் கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெராசவுக்கு 1980ம் ஆண்டு பாரத ரெத்னா விருது வழங்கப்பட்டது.

 

அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா 1997ம் ஆண்டு 87வது வயதில் இறந்தார்.

 

2016ம் ஆண்டு அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கொல்கத்தா புனித தெரசா என்று அவர் போற்ற பெறுகிறார்.

 

ஜனவரி 26ம் தேதி உத்தர பிரதேசத்தின் பிராயாக்கில் ஊடகங்களிடம் பேசியபோது, நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளு்ககும் கௌரவமான விருதை வழங்குகிற அரசு இந்து துறவிகளுக்கு ஏன் வழங்கவதில்லை என்று பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பினார்.

 

மி்னரிஸ் ஆப் சேரிட்டி என்ற பெண் துறவிகளுக்காக சபையை நிறுவிய புனித தெரசாவின் பெயரை தேவையில்லாத சர்ச்சசையில் சம்மந்தப்படுத்தி கேள்வி எழுப்பியுள்ளதாக கிறிஸ்தவ தலைவர்கள் ராம்தேவை கண்டித்துள்ளனர்.

 

“அவருடைய கூற்று தேவையில்லாதது” என்று கூறியுள்ள டெல்லி உயர் மறைமாவட்டத்தின் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை சவரிமுத்து சங்கர், மிகவும் ஏழைகளுக்கு அவர் ஆற்றிய சுயநலமற்ற பணிகளுக்காக இந்த விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது, ராம்தேவ் போன்றவர்களுக்கு தெரியாமல் இருப்பது கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.    

Add new comment

2 + 18 =