அனைத்து மக்களும் கொண்டாடிய பொங்கல் விழா


தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், பொங்கல் விழா  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 

அதிகாலையிலே எழுந்த மக்கள் எழுந்து, புத்தாடை அணிந்து, வீடு வாசலில் கோலம் போட்டு புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன் கதிரவனுக்குப் படையலிட்டு மகிழ்ந்தனர்.

 

பொங்கலை முன்னிட்டு கிராமங்களில் ஏராளமான கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

 

திங்கள்கிழமை புதுக்கோட்டையிலும், செவ்வாய்க்கிழமை அவனியாபுரத்திலும் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு ஜலலிக்கட்டு போட்டி நடைபெற்றது.

 

வளைகடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

 

ஏழைகளும் இந்த பொங்களை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரூபாய் 1000 உள்பட பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டையுடைய குடும்பத்தினருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

Add new comment

10 + 10 =