அனுமதி நேரத்திற்கு அப்பால் பட்டாசு வெடித்த 2,372 பேர் மீது வழக்கு


தமிழ் நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்ட நேரங்களில் பட்டாசு வெடித்த 2,372 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று தமிழ் நாட்டில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.  

 

பட்டாசு வெடிப்பதால் பூமியில் காற்று மாசு அதிகரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை தொடர்ந்து இத்தகைய வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

பட்டாசு வெடிப்பை கண்காணிக்க தமிழகத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6 மாதம் சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

Add new comment

3 + 6 =