அந்தமானில் கொல்லப்பட்டவர் மறைபரப்ப  சென்றவர் அல்ல - காவல்துறை


அந்தமானில் கொல்லப்பட்ட ஜான் ஆலென் சாவ் மறைபரப்ப சென்றவர் அல்ல என்று இந்திய காவல்துறையும், திருச்சபை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

அந்தமானில் ஜான் ஆலென் சாவ் கெல்லப்பட்ட தீவிற்கு மறைபரப்புவதற்காக சென்றதால்தான், அந்த பழங்குடி மகக்ள் அவரை அம்பு எய்து கொன்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய காவல்துறையும், திருச்சபை தலைவர்களும் ஜான் ஆலென் சாவ் மறைபரப்ப சென்றவரல்ல என்பதை தெளிவுபடுத்தி செய்தி வெளியிட்டு்ள்ளனர்

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் காவல்துறையின் தலைமை இயக்குநர் டிபென்திரா பதாக் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், சாவ் 27 வயதினர். அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வாழ்கின்றவர். மருத்துவ துறையை சோந்தவர் என்று கூறியுள்ளார்.

 

சமூக வலைதளத்தில் எங்கேயே அவர் கடவுள் பற்றி கருத்து தெரிவித்து இருந்ததால், சாவ்-வை மறைபரப்பாளர் என்று மக்கள் தவறாக எண்ணிவிட்டனர். அவரை மறைபரப்பாளர் என்று கூறிவிட முடியாது. அவர் ஒரு சாகசக்காரர். அங்குள்ள பழங்குடியினரை சந்திக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

கொல்லப்பட்ட ஜான் ஆலென் சாவ் பற்றி போர்ட் பிளேர் மறைமாவட்டத்தில் துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள அம்மறைமாவட்ட ஆயர் ஆலெக்ஸியோ தாஸ் நிவாஸ் டையஸ், இந்த பகுதியின் கத்தோலிக்க மறைபரப்போடு சேர்ந்தவராக ஜான் ஆலென் சாவ் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இந்த பகுதிக்கு செல்வது என்பது தற்கொலைக்கு சமம் என்று இங்குள்ள அனைவருக்கும் தெரியும். மறைபரப்பும் நோக்கத்தோடு ஆலென் சாவ் அங்கு சென்றார் என்பது தவறான தகவல் என்று இந்த ஆயர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

அங்கு சென்றால் நீங்கள் கொல்லப்படுவீாகள் என்று தெரிந்து வைத்த பின்னர், அங்கு மறைபரப்புவதற்காக செல்ல யார்தான் முற்படுவார்கள் என்று இந்த அயர் கேள்வி எழுப்பியுள்ளார்.    

Add new comment

1 + 2 =