அதிவிரைவு ரயிலில் 3 குளிர்சாதன வசதி பெட்டிகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு


அதிவிரைவு தொடர்வண்டிகளின் 3 குளிர்சாதன வசதியுடைய பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அந்த உத்தரவை வழங்கியுள்ளது.

 

ராஜ்தானி, துரந்தோ மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதி உடைய தொடர்வண்டிகளின் 3 குளிர்சாதன வசதியுடைய பெட்டிகளில் இது செயலாக்கம் பெறுகிறது.

 

வயது வரம்பின்றி தனியாகவோ, குழுவாகவோ பயணம் செய்யும் பெண்கள் முன்பதிவு செய்யும்போது இந்த ஒதுக்கீட்டால் பலனடைய முடியும்.

 

ஏற்கெனவே அனைத்து தொடர்வண்டிகளிலும் பெண்களுக்காக முன்பதிவில் இடம் ஒதுக்கீடு உள்ளது.

 

அனைத்து வகை மெயில் மற்றும் விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புப் பெட்டிகளில் 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Add new comment

9 + 2 =