அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள நார்வே கோரிக்கை


நார்வே மக்கள் அதிக மக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென என அந்நாட்டு தலைமையமைச்சர் கோரியுள்ளார்.

 

நாட்டின் எதிரகால நலனை கருத்தில் கொண்டு மக்கள் இதனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளான ஐஸ்லாந்து, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் சமீக காலமாக வெகுவாக குறைந்து வருவதால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

 

இந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதோடு, குறைவான குழந்தைபேறும் நடைபெற்று வருகின்றன.

 

ஆனால், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முன்னேறிய நாடுகளாகவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் முன்னனியில் இருக்கின்ற நாடுகளாகவும் இவை உள்ளன.

 

ஆனாலும், தொடாந்து குழந்தை பிறப்பு குறைந்து கொண்டே வருவதால் இந்த கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

Add new comment

11 + 4 =