அதிகாரபூர்வ சமூகத்தோடு இணைந்த பின்னர் சீன அருட்தந்தை இடைநீக்கம்


சீனாவின் வட பகுதியில் இருக்கின்ற மறைமாவட்டத்தின் நிழலுலக சமூகத்தை விட்டு வெளியேறியுள்ள அருட்தந்தை ஒருவரை சீன அரசின் தடுப்பு காவலில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட துணை ஆயர் இடைநீக்கம் செய்துள்ளார்.

 

அருட்தந்தை ட்சாங் லி இடைநீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்து ஹூபெய் மகாணத்திலுள்ள சுயான்ஹூவா மறைமாவட்ட ஆயர் அகஸ்டின் சுய் தாய் அறிக்கை அளித்துள்ளார்.

 

இந்த மறைமாவட்டத்தில் அருங்கொடை இயக்கங்களை அறிமுகப்படுத்தியபோது, நிழலுலக மற்றும் அதிகாரபூர்வ சமூகங்களுக்கு இடையில் போலியான ஒற்றுமையையும்,  குழப்பங்களையும் உருவாக்குவதாக அருட்தந்தை ட்சாங் லி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

 

ஆனால், இந்த அருட்தந்தை அதிகாரபூர்வ திருச்சபையில் ஐக்கியமாகிவிட்ட பிறகு, கத்தோலிக்கர்கள் தன்னை பின்பற்றி அதிகாரபூர்வ திருச்சபையோடு இணைந்து கொள்ள அவர் தூண்டியுள்ளார்.

 

இதனால், இவரை பின்பற்றி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரபூர்வ திருச்சபையோடு சுமார் 100 பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆயர் சுய்-யின் ஆயர் தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஒற்றுமையை உருவாக்கவே உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் அவர்கள் சமூக ஊடகங்களில் செய்திகளை பதிவிட்டுள்ளனர்.   

 

சீன அரசும், அதிகாரபூர்வ திருச்சபையின் மக்களும் அருட்தந்தை ட்சாங்கிற்கு சிறந்த ஆதரவு வழங்கி வருகின்றனர்.

 

எனவே அவரை இடைநீக்கம் செய்திருப்பதை அகற்ற வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add new comment

15 + 0 =