அணு ஆயுத ஒழிப்பு குறித்து வட கொரியா எச்சரிக்கை


அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடருமானால் வட கொரியாவும் நிலைப்பாட்டில் இருந்து மாறவேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஆனால், அணு ஆயுத ஒழிப்பு நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

புத்தாண்டு நாளில் ஆற்றிய உரையில் கிம் ஜாங்-உன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு வட கொரிய அதிபர் ஆற்றிய புத்தாண்டு உரைக்கு பின்னர்தான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் சர்வதேச அரசியல் உறவுகளில் முன்னேற்ற பாதையை உருவாக்கியது.

 

2018 ஜூன் மாதம் அணு ஆயுதங்களை களைந்து விடுவது பற்றி அமெரகிகா மற்றும் வட கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க நிலப்பரப்பை தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை வட கொரியா சோதித்து பார்த்தது அந்த பிரதேசத்தில் பதற்றங்களை அதிகரித்தது.

 

வட கொரிய அரசு ஊடகத்தில் உரையாற்றிய கின் ஜாங்-உன், அமெரிக்கா அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல் போனால், வடகொரியாவின் இறையாண்மையை காப்பாற்ற புதிய வழியை தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

 

2019ஆம் ஆண்டு அமெரிக்கா செயல்படுவதை பார்த்து அணு ஆயுத பரிசோதனைகளை தொடர்வதை வட கொரியா முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

Add new comment

1 + 1 =