அடுத்த ஆண்டு வெளியாகும் 5ம் தலைமுறை திறன்பேசி


ஹவாய் நிறுவனத்தின் முதலாவது 5ம் தலைமுறை திறன்பேசி அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியாகும் என்று அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜிம் சூ தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பொருத்தமான அலைக்கற்றைகளைப் பெற்றுவிட்டால், 5ம் தலைமுறை திறன்பேசியை அறிமுகம் செய்யத் தயாராக இருப்பதாக வீவோ நிறுவனமும் கூறியுள்ளது.

 

5ம் தலைமுறை திறன்பேசி விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் இது 2019-20ம் ஆண்டு வெளியாகும் எனக் கூறியிருக்கிறது.

 

 

Add new comment

3 + 3 =