Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அச்சுறுத்தும் அணு கழிவு அதிகரிப்பு
அணுசக்திக் கழிவின் அதிகரிப்பு உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாகி வருவதாக கிரீன்பீஸ் அமைப்பு கூறியுள்ளது.
அணு மின் நிலையங்களில் பயன்படுத்திய பின்னர் வெளியாகும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையோடு இருக்கும் எரிபொருட்களை வெளியேற்ற முடியாமல் பல நாடுகளும் விழித்துவருகின்றன.
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கிரீன்பீஸ் அமைப்பு தற்போது நெதர்லாந்திலிருந்து இந்தியா உள்ளிட்ட உலகின் பல பெரிய நாடுகளிலும் ஒரு முக்கியமான அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பாக இயங்கி வருகிறது.
ஏழு நாடுகளில்தான் அணுசக்தி நிலையத்தின் அருகிலேயே மக்களுக்கு கெடுதல் நேராத வகையில் முறையான கழிவு சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த ஆலைகளில் முழுமையடையாத பல தேவைகளால் தீ ஆபத்து, கதிரியக்க வாயுக்கள் வெடிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கொள்கலன்களின் தோல்வி, பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதிகரிக்கும் செலவுகள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன.
"இந்த அணு சக்தி மின் நிலையங்கள் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்காக தொடங்கி 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது.
கடும் ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தும் கதிரியக்க கழிவுகளை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு ஏதோ ஒரு நாட்டை மட்டும் குற்றம் சாட்ட முடியாது' என்று கிரீன்பீஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர் ஷாவுன் புர்ணி கூறியுள்ளார்.
குறிப்பாக, அணு சக்தி மின் உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் பூமிக்கடியில் சேகரிக்கப்படுகின்றன.
நீண்ட காலமாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் போன்றவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் பல பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
14 நாடுகளிலிருந்து விநியோகமான உயர்தர கதிரியக்கச் செலவுக்கான எரிபொருள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் டன்கள் உலக அளவில் கையிருப்பாக உள்ளது.
இந்த எரிபொருள் சேகரிப்பதற்கு பெரும்பாலான உறைவிப்பான் தளங்கள் குளிரூட்டும் குளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இப்படி இரண்டாவது முறை சேகரிப்பதில் உள்ள குறைபாடுகளால் குளிர் இழக்குமானால் ஒரு பெரும் பாதிப்பைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அணு சக்தி வல்லுநர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட 100 பக்க ஆய்வறிக்கை, பிரான்ஸில் அணுசக்திக் கழிவுகளை நீண்டகாலப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான நம்பகமான தீர்வு எதுவுமில்லை என்று கூறியுள்ளது.
எனவே அணு ஆற்றல் பயன்பாட்டால் உருவாகும் அணு கழிவு பெரும் அச்சுறுத்தாலாக மொதுவாக மாறி வருகிறது.
Add new comment