அச்சான புதிய நோட்டுகள் எவ்வளவு? – கணக்கு கேட்கும் சிஐசி


2016-ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோடடுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், அச்சடிக்கப்பட்ட 2000, 500 நோட்டுகள் எவ்வளவு என்ற விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தி பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் என்ற நிறுவனம்தான் 2000, 500 நோட்டுகள் அனைத்தையும் அச்சடித்தது.

 

ஆனால், இப்போது அச்சடித்த விவரங்களை வெளியிட அது மறுத்துள்ளது.

 

நாட்டில் இருக்கும் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க இந்த நடவடிக்கை என இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி அறிவித்தார்.

 

எனவே, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகமாயின.

 

ஆனால், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு தகவமைக்காமல் இருந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர். 

 

சமூக ஆர்வலர் ஹரிந்தர் திங்ரா தகவல் அறியும் மனுவின் மூலம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அச்சடிக்கப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள் விவரங்களைக் ரிசர்வ் வங்கியிடம், கேட்டிருந்தார்.

 

ரிசர்வ் வங்கி அளித்த விவரங்கள் மனநிறைவை அளிக்காததால்,

மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். எனவே, ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ் அனுப்பி பதில் அளிக்க ஆணையர் உத்தரவிட்டார்.

 

இந்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படக்கூடியவை என்பதால் எந்த விவரங்களையும் பொதுப்படையாக வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

 

ஆர்டிஐ சட்டம் பிரிவு 8(1)விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை சட்டிக்காட்டியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. .

 

ஆனால், இந்த விளக்கத்தை மத்திய தகவல் ஆணையர் பார்கவா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

Add new comment

7 + 3 =