அசியா பீபி நாட்டை விட்டு வெளியேற உதவுவதாக இத்தாலி அறிவிப்பு


பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் அசியா பீபி அந்நாட்டை விட்டு வெளியேற இத்தாலி உதவும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

 

தெய்வநிந்தனை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபி 8 ஆண்டுகள் தனிமை சிறையில் வாடிய பின்னர், மேல்முறையீட்டு தீர்ப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

 

அசியா பீபியை தூக்கிட வேண்டும் என்று இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அவருக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதால், அசியா பீபி மற்றும் அவரது குடும்பத்தார் பாகிஸ்தானை விட்டு வெளியேற இத்தாலி உதவுவதாக தெரிவித்துள்ளது.

 

அசியா பீபிக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் தொடர்வதால், தங்களுக்கு வெளிநாடுகள் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று அவரது கணவரான அஷிக் மசிக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

அசியா பீபி நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால், இஸ்லாமியவாதிகளால் அவர் கொல்லப்படலாம் என்று அவரது கணவர் தெரிவித்திருக்கிறார்.

 

மிகவும் சிறுபான்மையினராக இருக்கின்ற கிறிஸ்தவர்கள் உள்பட மத சிறுபான்மையினரை பாகிஸ்தான் நடத்துகின்ற விதத்திற்கு எதிராக மனித உரிமை குழுக்கள் குரல் கொடுக்க இந்த வழக்கு முக்கிய பங்காற்றியது.

Add new comment

6 + 3 =