அகதி அந்தஸ்து பெற்ற இஸ்லாமை துறந்த பெண்


இஸ்லாமை துறந்த 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

 

பதினெட்டு வயதாகும் இந்த சௌதி பெணான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார்.

 

ஆனால் பாங்காக்கில் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தன்னை சௌதிக்கு அனுப்பினால், குடும்பத்தினரே கொன்றுவிடுவர் என்று அவர் தெரிவித்திருந்தார்,

 

முன்னதாக, விமான நிலைய ஹோட்டல் அறைக்குள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன், இப்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார்.

 

ஐநா அகதிகள் நிறுவனம் இந்த பெண்ணின் விவகாரத்தை கையாள தொடங்கியுள்ளது.

 

தாய்லாந்து வந்திருந்த அவரது தந்தை மற்றும் சகோதரரை  பார்க்க ரஹாஃப் மறுத்துவிட்டார்.

 

இந்நிலையில், இந்த பெண்ணுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆஸ்திரேலிய அரசிற்கு ஐநா அகதிகள் நிறுவனம் பரிந்துரைத்தது.

 

இந்த பெண்ணின் விவகாரத்தை கருத்தில் எடுத்துக் கொள்வதாக ஆஸ்திரேலிய உள்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இஸ்லாம் மதத்தை துறப்பது சமய எதிர்ப்பு குற்றமாக கருதப்பட்டு, சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Add new comment

17 + 1 =