அகதிகள் பிரச்சனையை முதன்மை படுத்தும் ஆசிய ஆயர்கள்


ஆசியாவிலுள்ள குடியேறிகள், அகதிகள், இடம்பெயர்ந்து வாழ்வோர், ஆள்கடத்தல் மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி ஆகியவை பற்றி விவாதித்த சர்வதேச கருத்தரங்கு வங்கதேசத்தில் நடைபெற்றுள்ளது.

 

ஆசிய ஆயர்கள் பேரவையால் பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் டாக்காவின் கர்தினால் பேட்ரின் டிரோசாரியோ, 9 பேராயர்கள் மற்றும் ஆயர்கள், 14 அருட்தந்தையர் 11 ஆசிய நாடுகளை சேர்ந்த பொதுநிலையினர் பங்கேற்றனர்.

 

மியன்மாரின் 10 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்ற கோக்ஸ் பஜாரில் இந்த பேரவை கூட்டம் நடைபெற்றது.

 

குடுப்பாலாங் அகதிகள் முகாமை பார்வையிட்ட இந்த கருத்தரங்கில் பங்கேற்றோர் ஆறு அணிகளாக, குழு அறிக்கைகளை சமர்ப்பிததுள்ளனர்.

 

நாடுகளில் இருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் கத்தோலிக்க திருச்சபைகளின் பதில்கள் மற்றும் குடியேறிகள், அகதிகள் ஆட்கடத்தல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகளை சமர்பித்தனர்.

 

குடியேறிகள், அகதிகள், ஆட்கடத்தல் மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி போன்ற பிரச்சனைகளில் ஆசிய திருச்சபைகள் அளிக்கும் பதில்களின் பொது கட்டமைப்பை உருவாக்கவும் இந்த கருத்தரங்கம் நோக்கம் வைத்திருந்தது,

 

இந்த நிகழ்ச்சி இரண்டு நோக்கங்களுக்கு உதவியதாக மும்பை துணை ஆயரும், ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் மனித வளர்ச்சிக்கான செயலதிகாரியுமான ஆயர் ஆல்வின் டி‘சில்வா கூறியுள்ளார்.

 

முதலாவதாக, திருச்சபை மிகவும் கவனத்தில் எடுத்து கொண்டு செயல்படும் உலக அளவிலான அகதிகள் பிரச்சனை. இரண்டாவதாக அகதிகள் மற்றும் குடியேறிகளை தன்னுடைய முன்னிலை முதன்மையாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். ஆசிய ஆயாகள் இதனை முன்னெடுத்து செல்ல முடியும் என்று ஆயர் டி!சில்வா கூறியு்ளளார்.

Add new comment

6 + 5 =