ஃரபேல் ஒப்பந்தம் – நடுவண் அரசின் நடவடிக்கைகள் சரியென தீர்ப்பு


ஃரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்களில் நடுவண் அரசின் செயல்முறைகள் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றம் தீாப்பளித்துள்ளது.  

 

இந்திய ராணுவத்திற்கு தேவையான அதிநவீன ரபேல் போர் விமானங்களை டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க நடுவண் அரசு ஒப்பந்தம் செய்தது.

 

126 விமானங்கள் வாங்குவதற்கு முன்னதாக ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட நிலையில், வெறும் 36 விமானங்களாக பின்னர் குறைக்கப்பட்டது.

 

இந்நிலையில் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்,  இந்த ஒப்பந்தம் தொடா்பான அரசின் நடவடிக்கைகளை தெளிவாக வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

 

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அமா்வு வழங்கிய தீா்ப்பில், ரபேல் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு சரியானதே. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது என்று தீர்ப்பளிக்கப்பட்டு்ளளது.

Add new comment

7 + 1 =