இனி கற்பது சாத்தியமா?

கொரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு தளங்கங்களில் தாக்கங்களை கொண்டிருக்கிறது. அந்த தாக்கமும் மாற்றங்கள் உருவாக்கியிருக்கிறது. முக்கியமாக கல்வி கற்றுக்கொடுக்கும் முறையிலும், கல்வி கற்றுக்கொள்றும் முறையிலும் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று அறிவியலாளார் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் எதிர்பார்ப்புகளையும் மாற்றங்களையும் முன்அறிவிக்கின்றார்கள். கற்றுக்கொள்வது என்பது பள்ளிக்கு, கல்லூரிக்குச் சென்று படிப்பது மாறி, வீட்டிலிருந்து கற்றுக்கொள்ளுதல் என்று வருகின்றபோது இது எந்த மாதிரியான வாழ்க்கை மாற்றத்தை உருவாக்கும். நம்முடைய அறிவு வளர்த்துக்கொள்ளுதல் எந்த முறையில் மாறும் என்பதை வித்யாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் வகுப்பறையில் 60 பேர் இருப்பார்கள். இந்த சுய தனிமை, சமூக இடைவெளியினால் அப்படி அமர்ந்து கல்வி கற்க இயலாது. எனவே வகுப்பறையில் 20 பேர் அமரவேண்டும், மீதம் 40 பேர் ஊடகம் வழியாக (மெய்நிகர் தொடர்பில்) கற்கவேண்டும். ஊடகம் வழியாக கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கவேண்டும், என்னவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும், எந்தவொரு சூழல் அமையவேண்டும் என சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதில் என்ன நிகழும் என்று சென்னால்? அறிவு சார்ந்த வளர்ச்சி இருக்கும் (Cognitive learning). ஆனால் அவர்களின் பண்பிலும் ஆளுமையிலும் வளர்ச்சி இருக்காது என ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஒரு மனிதனை படித்தவன் என்று சொல்லுகின்றபோது அவனுடைய அறிவு செறிவு மட்டுமல்ல, அவன் பண்பிலும், ஆளுமைத் திறன் கொண்டவர், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய தெளிவான நோக்கு உடையவர் என்று சொல்கிறார்கள். இனி ஊடகம் வழியாக கற்றலில் அது இருக்காது.

The Emotional Character and personality development will not happen. பண்பு இருக்காது படிப்பு இருக்கும். இந்த மாற்றம் எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்கும் என்றால், அவர்கள் அறிவு செறிந்தவர்களாக இருப்பார்கள், ஆனால் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஏனென்றால் இப்பொழுது ஒரு மாணவன் பள்ளிக்கு வருகிறான். அனைவரும் பார்ப்பதில் அவனுள் ஒரு மாற்றம் நிகழ்கின்றது. அவன் பார்க்கப்படுவதால்தான் உடைகளை மாற்றிக்கொள்கிறான். பார்க்கவில்லை என்றால் உடையே தேவையில்லையே, அழகே தேவையில்லை. என்னை பார்க்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றம் இல்லாமல் போகும். தொட்டு உணர்தல் இல்லாமல் போய்விடும். தொடுவதால் என்டோஸ்பின் என்ற அமிலம் சுரக்கின்றது. அது அவனுள் ஒரு நேர்மறையான மாற்றங்களை உருவாக்குகிறது. ஆக இந்த இரண்டும் நடைபெறுவதில்லை. ஊடகம் வழியாக கற்கும்போது உறவுத் தொடர்பு, பழக்கங்கள், சண்டைகள், உணர்வு குவியல்கள், அது ஏற்படுத்தும் மாற்றங்கள் இல்லாமல் போய்விடும். ஆக பண்பாளர்கள் உருவாகமாட்டார்கள், அறிவாளிகளாக உருவாகுவார்கள். இது சமூகத்தில் ஒரு வெற்றியிடத்தை கொண்டுவரும். எனவே ஒரு வேளை இந்த நிலைமாறிவிடும் என்று நாம் நம்பினாலும், கல்வி கற்றலில் மபெரும் மாற்றத்திற்கு நாம் தயாராகவேண்டும்.

If a teacher does not know handle a digital platform, he cannot be a teacher hereafter. தொழில்நுட்பத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள் ஆசிரியராக இருக்கமுடியாது. அறிவு இருக்கும், நல்ல தகவல்கள் இருக்கும் ஆனால் அவர்கள் நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியாது. ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அமைப்புகளில் என்ன மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது என்றால் கட்டிடங்கள் எல்லாம் குறைந்து, தொழில் நுட்பக் கருவிகள் அதிகரிக்கும். Physical buildings will go and technological gadgets will improve. ஒரு பள்ளியை நடத்துவதற்கு அவர் கட்டிடங்கள் கட்டத்தேவையில்லை. மாறாக ஒரு லேப்டாப் இருந்தால் போதும் என்பதுபோல் இருக்கும்.

இந்த மாற்றத்தை திறன்பட கையாளுபவர்கள்தான், இனிமேல் மிகச்சிறந்த கல்வியாளர்களாக மாறுவார்கள். கல்வித் தந்தையர்கள் என்று சொல்பவர்கள் எல்லோரும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்றால், தந்தையராக இருக்கமாட்டார்கள், அநாதைகளாக மாறிவிடுவார்கள் கல்வித் தளத்தில். இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வது அவசியம். மாணவர்களிடம் அறிவு செறிவு இருக்கவேண்டும், அதே சமநிலையில் ஆளுமையும், சமூக அக்கறையும் இருக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி, கற்றலில் மாற்றங்களைக் கொண்டுவந்துகொண்டிருக்கும் முனைவர் ஜோ அருண் அவர்கள், நம் எதிர்கொண்டிருக்கும் கற்றல்முறை எவ்வாறு கையாளுவது என்பதனை நம்மிடம் பகிர்ந்துள்ளார்கள். பார்த்து பயன்பெறுவோம், பிறருக்கும் பகிருவேம். மாற்றத்திற்கு நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

​(முனைவர் ஜோ அருண் அவர்களின் காணொளி செய்தியின் ஒரு சுருக்கம்தான் இது. முழு காணொளியையும் பார்த்துப் பயன்பெறுங்கள்.)

#rvapastoralcare #veritastamil

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website: http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org

**for non-commercial use only**

Add new comment

6 + 4 =