அதிகாலை ஜெபம் - ஒளியைக் கொணர்ந்தவரே

தூயவரான எல்லாம் வல்ல இறைவா, உன் வார்த்தை யாலே ஒளியைக் கொணர்ந்தவரே! வாழ்வின் ஊற்றே! உம் இரக்கத்தாலே நல்ல நீண்ட உறக்கத்தை எமக்கு தந்தவரே! இன்றைய நாளை மகிமைப்படுத்த என்னை மீண்டும் எழுப்பியுள்ளீர்  நன்றி. இந்த நாளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம் இனிய அன்பினால் எங்களை ஏற்றருளும். எங்கள் விண்ணப்பங்களை எல்லாம் கேட்டருளும்.

அவை எங்களுக்கு மீட்பு அளிப்பனவாக. இன்று ஒளியின் மக்கள் நாங்கள் என்று பறைசாற்ற வாய்ப்பளியும். ஆண்டவரே உன் பிள்ளைகள் எல்லாரையும் நினைவுகூறும். எல்லோர் மேலும் உமது பேர் இரக்கத்தை பொழிந்தருளும். இன்றைய வாய்ப்புகளை பயன்படுத்த எமக்கு அருளும். எங்கள் சகோதரத்துவத்தை வளர்க்க உதவும்.

நாங்கள் போகும் போதும் வரும் போதும் காத்தருளும். இன்று எங்களுக்கு நல்ல பசியையும் நல்ல உணவையும் தாரும். எங்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. அன்பு எங்கும் பரவுவதாக. எல்லோருக்கும் உமது ஆசியை வழங்கிடும் ஆண்டவரே. ஆமென்.

Add new comment

10 + 5 =