அதிகாலை ஜெபம்

எங்கள் அன்பு ஆண்டவரே, பறவை இனங்களும் கால்நடைகளும் உம்மை தொழும் இந்த அதிகாலையில் உம்மை புகழ்கிறோம் நன்றி. எல்லாவற்றையும் தியதாக்கும் இந்த காலைவேளையில் எமக்கு சக்தியை வேண்டுகிறோம். எங்கள் ஆன்மாவை இன்று காத்திடும். எங்களை படைத்தவரே! நல்லவரே! இன்று உமக்கு அருகில் இருக்க வரம் தாரும்.

இன்றைய நாளுக்கு எம்மை கொண்டு வந்திருக்கின்றீர், இன்று உலகனைத்தையும் புதியதாக்கும், தூயதாக்கும். என் இதயத்தையும் புதுப்பித்திடும். நேற்றைய என் தவறுகளை எல்லாம் மன்னியும். என்னுள் இருந்து நீர் ஒளி வீசும். என் பயணத்தில் நான் சந்திக்கும் நபர்கள் உம் பிரசன்னத்தை உணர்வார்களாக. என் கரம் பிடித்து நடத்திடும். 

ஆமென்!

Add new comment

2 + 3 =