Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக புரத தினம் | World Protein Day
உலக புரத தினம்:
புரதத்தால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வை
ஏற்படுத்த பிப்ரவரி 27 ஆம் தேதி உலக புரத தினம் கொண்டாடப்படுகிறது.
புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இறைச்சி வகைகள்,
மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது.
இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த
திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது.
உயிரினங்களில் காணப்படும் நொதிகள் (enzymes), வளரூக்கிகள் (hormones),
3
‘ஈமோகுளோபின்’ எனும் இரத்தப் புரதம் போன்ற உடற் தொழிற்பாடுகளுக்கு
அவசியமான கரிமச் சேர்மங்கள் யாவும் புரதங்களால் ஆனவையாகும். நகம், முடி
வளர்வதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) உணவு நிபுணர்
குழுவின் கருத்துப்படியும் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிலைப்படியும் ஒரு
இந்திய தனிநபருக்கு ஒரு நாளில் ஒரு கிலோகிராம் உடல் எடைக்கு ஒரு கிராம்
வீதம் புரதம் தேவை. 10 கி.கி. எடை அதிகரித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு
மேலும் 23 கிராமும், பால் கொடுக்கும் காலங்களில், குழந்தை பிறந்த முதல் 6
மாதத்திற்கு 19 கிராம் அதிகமாகவும், 6-12 மாதத்திற்கு 13 கிராம் அதிகமாகவும்
தேவைப்படும். உணவுப் பழக்க முறைகளில் உள்ள வேறுபாடு காரணமாக,
வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தனிமனிதருக்கு இந்த அளவில் சிறிய வேறுபாடு
காணப்படும்.
Add new comment