Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புன்னகையால் பூக்கும் பூக்கள்... | அருட்பணி. ராஜன் SdC |Veritas Tamil
திங்கள்கிழமை பரபரப்பான காலை. கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்ததில் நின்று கொண்டிருந்தேன். மனதில் இன்று நான் வகுப்பில் கொடுக்க வேண்டிய "presentation" பற்றிய பயத்தோடு, அதனைப் பற்றிய சிந்தனையிலே மூழ்கிப் போயிருந்தேன். என்னைப் போல பேருந்திற்காக காத்திருக்கும் எல்லோருமே என்னைப் போல் மிகவும் "serious" ஆக இருந்தனர். ரோட்டில் வாகனங்கள் செல்கிற வேகத்தையும், எண்ணிக்கைகளையும் பார்க்கபோது, எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி ஒடிக்கொண்டிருப்பதாகவே தெரிந்தது. எல்லோருக்கும் இன்று என்னைப் போலவே, ஏதாவது "Presentation, assignment, submission இருக்குமோ?" என்றுகூட எனக்குத் தோன்றியது. என் சிந்தனை ஓட்டத்தை சீர்குலைக்கும் வண்ணம் நான் செல்ல வேண்டிய பஸ் வந்து சேர்ந்தது. பல்வேறு முட்டல் மோதல்களுக்கும் பின் (அடுத்த வருடமாவது எப்படியாவது டூவிலர் வாங்கிவிட வேண்டும் என்று மனதுக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டு) ஒரு வழியாக படிக்கட்டுகளைத் தான்டி பேருந்துக்குள் நிற்க இடம் பிடித்துக் கொண்டேன். கம்பியை பிடித்துக் கொண்டே சற்று என் கைமேல் சாய"presentation"பயம், மீன்டும் தொற்றி கொண்டது. பேருந்தில் ஒரு சிலர் சீட்டில் அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிப்பதை பார்க்கும்போது இவர்களுக்கெல்லாம், காலேஜ்,'presentation' இந்த கவலையெல்லாம் இருக்காதுல்ல,அதனாலதான் ஜாலியா சீட்ல உட்கார்ந்துட்டு வர்றாங்க என்றெல்லாம்கூட எண்ணத்தில் வந்துபோனது.
பேருந்து காலேஜின் நிறுத்தத்தை வந்தடைந்தது,நான் இறங்க முற்பட, கூட்டத்தில் அவர்களை என்னை வெளியில் தள்ளிவிடுவதுபோல இறக்கிவிட்டார்கள், என் பின்னே, என் சக மணவர்களும், மானவிகளும் இறங்கினர்.கல்லூரி கண்ணுக்குத் தெரிய, 'Presentation' பற்றிய எண்ணம் மீண்டும் வந்தது. கல்லூரியை அடைய நீளமான அந்த ரோட்டை கடந்து. மறுமக்கம் செல்ல வேண்டும். மறுமுனையில், போக்குவரத்தை ஒழுங்கு செய்யக்கூடிய போலீஸ்காரர், விசில் சப்தத்தோடு, வாகனங்களோடு, மாணவர்களையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்.
நாள் சுதாரிப்பதற்க்குள், மற்ற மாணவர்கள் ரோட்டைக் கடக்க எனக்கு முன்பாகச் சென்றுவிட, எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு கார் சர்ரென்று வேகமாக கடத்து சென்றது. முன்வைத்த காலை பின்வைத்து, ரோட்டிற்கு வெளியே வந்துவிட்டேன். தனி ஒருவனாய் ஒருமுனையில் ரோட்டைக் கடக்க ரோடு காலியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டு. அத்தனை பரபரப்புக்கு நடுவிலும், என் முகத்தில் பயத்தை அறிந்து கொண்ட, அந்த போலிஸ்காரர் விசிலை ஊதிக் கொண்டு, இருபுறகும் வாகனங்களை நிறுத்துக் கொண்ட வந்த அவர், என்னைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு "தம்பி வாங்க" என்றார். எங்கே போனது என் பயம்?" எனக்குத் தெரியவில்லை. நான் ரோட்டை கடக்க என் பின்னே பாதுகாப்பாய் வந்த அவரை, இறுதியில் Thank You Sir' என்று புன்னகையுடன் சொன்னேன்" Have a good day" -என்று அவர் பதிலுக்கு வாழ்த்த, Presentation பற்றிய பயழும் அவரது புன்னைகையிலே காணமல் போனதால், அந்த நாள் ஒரு மிக அருமையான நாளகவே அமைந்தது! அன்று அவரியும் பெற்ற அந்த சிறிய புன்னகையை இன்றும் பார்க்கும் எல்லோரோடும் பகிர்ந்து வருகிறேன்.
வழியில் யாரேனும் புன்னைகையின்றி பார்த்தால் தயவுசெய்து உங்கள் புன்னகையை கொடுத்துவிட்டு வாருங்கள். கண்டிப்பாக, அது உங்களுக்குத் தேவையானபோது உங்களிடமே திரும்பி வரும்!
எழுத்து: அருட்பணி. ராஜன் SdC
Add new comment