Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தந்தையை பின்தொடரும் மகன்களின் சேவை...| Veritas Tamil
தில்லியில் உள்ள சில தெருக்களில் காலை நேரம் இதயப்பூர்வமான முயற்சியுடன் தொடங்கும் - இலவச மருத்துவ உதவி முகாம். இந்த முகாமினால் பயனடைவோர் பெரும்பாலோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
மருத்துவர்களும் தன்னார்வலர்களும் 1989 ஆம் ஆண்டு திர்லோச்சன் சிங் என்ற குடியிருப்பாளரால் தொடங்கப்பட்ட 'வீர்ஜி கா தேரா' அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர். ஓய்வுக்குப் பிறகு சிங் தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்ப்பணித்த பணியை மேற்கொண்டார்.
இன்று, அவரது மகன்கள் பிரிகேடியர் பிரேம்ஜித் சிங் பனேசர் மற்றும் கமல்ஜீத் சிங் ஆகியோர் இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது குழுவுடன், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 350-400 பேருக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.
உள்ளூர் குருத்வாராவை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்வர். மேலும் லாங்கர் சேவைகளில் தன்னார்வத் தொண்டு செய்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை பாதுகாப்பார் என்பதால் அவருக்கு 'வீர்ஜி' என்ற பெயர் வந்ததாக சிங்கின் மகன்கள் கூறுகிறார்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவும் அதே முனைப்பு இன்றும் தொடர்கிறது.
"நாங்கள் ஒரு தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஒவ்வொருவரும் நாம் 'சேவை' செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் முன்வருகிறோம். தினமும் காலை 7 மணிக்கு, தேரா தன்னார்வத் தொண்டர்கள் குருத்வாரா சிஸ் கஞ்ச் மற்றும் தேசிய தலைநகரின் பிற இடங்கள் வழியாக தெருவுக்கு வந்து வீடற்றவர்களின் மருத்துவத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள், ”என்கிறார் கமல்ஜீத்.
இந்த அமைப்பு டெல்லியின் தஷ்ரத் புரியில் 65 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் நடத்தி வருகிறது. தேவைப்பட்டால், தன்னார்வலர்கள் , அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை (DDU) ஆகியவற்றிலும் நோயாளிகளை அனுமதிக்கின்றனர்.
Add new comment