Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வத்திகானின் புதிய ஆவணம் - சமுக வலைத்தளத்தில் நாம் யார் ? வேரித்தாஸ் செய்திகள்
வத்திக்கானில் உள்ள சமூக தொலை தொடர்பு பேராயத்தின் சார்பாக மே 29 அன்று புதிய ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இந்த சமூக வலைத்தளங்கள் நம்மை நல்ல சமாரியர்களாக மாற்றுகிறதா அல்லது பார்வையாளர்களாக மாற்றுகிறதா என்று விவாதிக்கும் ஆவணத்தை வெளியிட்டது.
நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்பொழுது நாம் அனைவரும் ஏதாவதொரு வகையில் நல்ல சமாரியர்களாக இருந்து இருப்போம் என்பதை நம்மால் உணர முடியும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை கூர்ந்து நோக்கும்போது நல்ல சமாரியன் உவமையில் வரும் கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பு நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கலாம். சிலருடைய வாழ்வில் நாம் கொள்ளையர்களாக இருந்து இருப்போம், சிலருடைய வாழ்வில் வழிப்போக்கர்களாக இருந்து இருப்போம், சில சமயம் நாமும் சிலருடைய வாழ்வில் நல்ல சமாரியர்களாக கூட இருந்து இருக்கலாம். எதோ ஒரு கதாபாத்திரம் நிச்சயமா எல்லாருடைய வாழ்விலும் இருந்து இருக்கும் என்பது தான் உண்மை.
சமூக வலைத்தளங்கள் வழியாக இன்று நாம் அனைவரும் உறவுகளை வளர்த்து வருகிறோம் ஆனால் இங்கு அனைவரும் ஒரு பார்வையாளர்களாக வழிப்போக்கர்களாக மட்டுமே இருக்கிறோம்.
நாம் அனைவரும் வலைத்தளம் என்னும் இந்த நீண்ட நெடுஞ்சாலையில் வழிப்போக்கர்களாக இருக்கலாம் அல்லது வெறுமனே இணைக்கப்பட்டிருக்கலாம், அல்லது நல்ல சமாரியன் போன்று உறவுகளை வளர்த்து நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து, இந்த இணைப்புகளை உண்மையான சந்திப்புகளாக வளர அனுமதிக்கலாம், இவை யாவும் நம் கையில்தான் உள்ளது என்று என்று ஆவணம் அதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறது.
ஒரு நல்ல சமூக ஊடகப் பயனாளர் ஒரு நல்ல சமாரியனாக இருக்க வேண்டும் அவரோடு இணைப்பில் இருக்கும் பிறரை இக்கட்டான சூழ்நிலையில் தடுமாறும்போது அவர்களுக்கு கரம் கொடுத்து உதவ வேண்டும் அது மட்டுமே ஒரு நல்ல சமாரியனின் கடமை ஆகும்.
சாதாரண வழிப்போக்கன் காயம்பட்ட மனிதனின் காயங்களுக்கு மருந்திட்டு அவனை பராமரிக்கும் போது அவன் உண்மையான அயலான் ஆகிறான் என்று விவிலியம் கூறுகிறது. ஒரு சக மனிதனைப் பராமரிப்பதில், அவர் உடல் காயங்களை மட்டுமல்ல, மாறாக மனக்காயங்களையும் அது மட்டும் அல்லாமல் அவர்களின் சமூக குழுக்களிடையே இருக்கும் பிளவுகள் மற்றும் பகைமையையும் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இந்த ஆவணம் கூறுகிறது. மேலும் வத்திகானின் இந்த ஆவணம் சமூக ஊடகங்கள் திருஅவையின் பல பணிகளுக்கு இது சக்திவாய்ந்த கருவி என்பதை இந்த ஆவணம் அங்கீகரித்துள்ளது.
COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் உலகமே தங்கள் எல்லைகளை அடைத்துவிட்டு ஊரடங்கு செயல்பாட்டில் இருந்த கொரோனா காலத்தில் தூய பேதுரு சதுக்கம் வெறிச்சோடி காணப்பட்டது வரலாற்றில் முதல்முறையாக. ஆனால் உலகம் முழுவதும் பார்வையாளர்கள் நிறைந்து காணப்பட்டனர் ஊடகம் முன்பாக திருத்தந்தையின் செய்தியைக் கேட்க. தொலைக்காட்சி மற்றும் நேரடி ஒளி- ஒலிபரப்பு வாயிலாக பூட்டப்பட்ட உலகத்திற்கு திருத்தந்தையின் ஜெபங்களும் ஆசிர்வாதமும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்ல திறவுகோலாக இருந்தது இந்த ஊடகங்கள்.
தோற்று நோயினால் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் இருந்தவர்கள் கூட மன உறுதியோடு என்னோடு என் குடும்பமும், நட்பும் இருக்கிறது என்பதை உணர வைத்தது இந்த சமூக ஊடகங்கள். இந்த ஆவணம் நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் அல்ல மாறாக தொழில் வல்லுநர்கள், பல துறைகளில் பணியாற்றும் திறமையாளர்கள், சமூக ஊடகத்தை பயன்படுத்தும் அனைத்து இளம் தலைமுறை மற்றும் உலகம் அனைத்துக்கும் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாவ்லோ ருஃபினி கூறியுள்ளார்.மேலும் இந்த ஆவணம், 2015 இல் நிறுவப்பட்டதில் இருந்து சமூக ஊடக பேராயம் பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கான பதில் இந்த ஆவணம் கூறும் என்று ருஃபினி குறிப்பிட்டார்.
ஒரு கருவியிலிருந்து கலாச்சாரத்திற்கு மாறுவது மட்டுமே இன்றைய அவசியம், ஏனெனில் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன, கலாச்சாரம் வாழ வைக்கின்றன. கலாச்சாரம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது கருவிகள் அதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் இதனை உணர்ந்து இந்த ஊடக கருவிகளின் தேவை இந்த உலகத்திற்கு தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 29, 2015 அன்று தகவல்தொடர்பு பேராயத்தை முறையாக நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது,
அருள்பணி வி.ஜான்சன் SdC
(News Source from RVA English)
Add new comment